திரிபுராவில் மாநில அரசால் நடத்தப்பட்ட போதைப் பொருள் எதிர்ப்பு நடவடிக்கையின் மூலம் 70 ஆயிரம் கஞ்சா செடிகள் அழிக்கப்பட்டுள்ளது.
திரிபுராவில் உள்ள பிஷல்கர் பகுதிகளில் போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கையில் போலீசார், போதை தடுப்பு பிரிவு அதிகாரிகள் மற்றும் துணை ராணுவ படையினர் ஈடுபட்டனர்.
அப்போது பயிரிடப்பட்டிருந்த சுமார் 70 ஆயிரம் கஞ்சா செடிகளை போலீசார் அழித்தனர். இதன் மதிப்பு பல லட்சம் ரூபாய் இருக்கும் என்று கூறப்படுகிறது.
















