தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் மேம்பாலத்தில் இருந்து தவறி விழுந்த இருசக்கர வாகன ஓட்டிப் பரிதாபமாக உயிரிழந்தார்.
ஹைதராபாத்தின் கச்சிகுடாவில் இருந்து அம்பர்பேட்டை நோக்கிச் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகன ஓட்டி ஒருவர் சேன்னம்பார் எண் சௌரஸ்தா பகுதியில் உள்ள மேம்பாலத்தில் சென்றுகொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக மேம்பாலத்தில் மோதிக் கீழே விழுந்த இரு சக்கர வாகன ஓட்டிப் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
















