தவெக துயரம் சம்பவம் தொடர்பான வழக்கின் விசாரணை குறித்து, ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி தலைமையிலான மூவர் குழு கரூர் சிபிஐ அலுவலகம் சென்றது.
கரூர் மாவட்டம், வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி நடந்த தவெக பிரசாரத்தின் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த நிலையில், 110 பேர் காயமடைந்தனர்.
இது தொடர்பான வழக்கை உச்சநீதிமன்ற உத்தரவுப்படி சிபிஐ விசாரணை நடத்தி வரும் நிலையில், இதுவரை உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், காயமடைந்தவர்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள், தவெக மாநில நிர்வாகிகள் உள்ளிட்டோரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர்.
இந்நிலையில் சிபிஐ விசாரணையை கண்காணிக்கும் உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான சிறப்புக் குழு கரூர் சென்றுள்ளது.
வழக்கு தொடர்பாக சிபிஐ இதுவரை விசாரணை செய்துள்ள தரவுகளை குழுவினர் ஆய்வு செய்தனர்.
















