சென்னை, திருவொற்றியூரில் காலை முதலே மழை பெய்து வந்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்தது.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாகச் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது.
அந்த வகையில் திருவொற்றியூர், எண்ணூர், மணலி, வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழைபெய்தது.
இடைவிடாமல் பெய்த மழையால் வேலைக்குச் செல்வோர், வியாபாரிகள் உள்ளிட்டோர் அவதி அடைந்தனர்.
















