இடைவிடாது பெய்த மழை காரணமாகச் சென்னையை அடுத்துள்ள மதுரவாயல் சாலையில் மழைநீர் தேங்கியது.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாகச் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வந்தது.
இடைவிடாது பெய்த மழையால் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியது. அந்த வகையில் மதுரவாயல், சென்னீர்குப்பம், கோயம்பேடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழைநீர் அதிக அளவு தேங்கியது.
மதுரவாயலில் சாலையின் இருபுறமும் மழைநீர் தேங்கியதால் வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டது.
மேலும் கழிவு நீருடன் கலந்தபடி மழைநீர் தேங்கி நிற்பதால் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளதாகத் தெரிவித்த பொதுமக்கள், கழிவுநீர் கால்வாயைப் பராமரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டினர்.
மேலும், சாலையில் தேங்கி இருக்கக்கூடிய கழிவுநீரை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் எனவும் பொதுமக்கள் அரசுக்குக் கோரிக்கை வைத்தனர்.
















