தேசத்துக்காகத் தன்னை அர்ப்பணித்தவர் சி.பி.ராதாகிருஷ்ணன் என்று மாநிலங்களவையில் பிரதமர் மோடி புகழாரம் சூட்டினார்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி வரும் 19ம்தேதி வரை நடைபெறுகிறது.
குடியரசுத் துணைத் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள சி.பி.ராதாகிருஷ்ணன் முதன் முறையாக மாநிலங்களவை தலைவராகத் தனது பணியைத் தொடங்கினார்.
அவருக்குப் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். இதுகுறித்து மாநிலங்களவையில் பேசிய பிரதமர், எளிய பின்னணியை கொண்ட அவர், குடியரசுத் துணைத் தலைவராக உயர்ந்துள்ளது, நமது ஜனநாயகத்தின் வலிமையை காட்டுகிறது என்றார்.
















