சென்னை வேலப்பன்சாவடியில் வெள்ளத்தில் மூழ்கிய காரை கிரேன் உதவியுடன் போக்குவரத்து போலீசார் மீட்டனர்.
சென்னை ஆவடியை சேர்ந்த கார்த்திகேயன் என்பவர், வேலப்பன்சாவடி சர்வீஸ் சாலையில் காரில் சென்றுகொண்டிருந்தார்.
அப்போது பள்ளத்தில் தேங்கியிருந்த மழைநீரில், கார் இறங்கியது. ஆழம் அதிகமாக இருந்ததால் கார் வெள்ளத்தில் மூழ்கத் தொடங்கியது.
இதனால் ஓட்டுநர் உடனடியாகக் காரில் இருந்து வெளியேறினார். தகவலறிந்து வந்த போக்குவரத்து போலீசார், நீண்ட போராட்டத்திற்கு பிறகு கிரேன் உதவியுடன் காரை மீட்டனர்.
















