சென்னை வண்ணாரப்பேட்டையில் அரசு உதவி பொறியாளர் மீது தாக்குதல் நடத்திய திமுக வட்டச் செயலாளரை, போலீசார் தேடி வருகின்றனர்.
பூண்டி தங்கம்மாள் பகுதியில் உள்ள மீனவ குடியிருப்பு கட்டடத்திற்கு சொந்தமான இடத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்ததாகப் புகார் எழுந்தது.
இதனால் ஆக்கிரமிப்பை அகற்ற சென்ற அரசு உதவி பொறியாளர் அரவிந்தை, அப்பகுதி திமுக வட்டச் செயலாளர் கஜேந்திரன் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பான புகாரில் திமுக பிரமுகர் கஜேந்திரன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதே போல் திமுக பிரமுகர் கஜேந்திரன் சார்பிலும் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
















