திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் குடியிருப்புப் பகுதிகளை மழைநீர் சூழ்ந்ததால் மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
மீஞ்சூர் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாகக் கனமழை கொட்டித் தீர்த்தது. இதேபோல் கல்பாக்கம் ஊராட்சியில் பெய்த கனமழையால் நரிக்குறவர் காலணி பகுதியில் வெள்ளநீர் புகுந்தது.
இதனால் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் மழையால் பாதிக்கப்பட்ட தங்களுக்கு அரசு எந்த உதவியும் செய்யவில்லை என அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து தண்ணீரை வெளியேற்ற அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
















