மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தீபத் திருவிழாவையொட்டி வைரத் தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
கார்த்திகை தீபத் திருவிழா கடந்த மாதம் 25-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனையொட்டி சுப்பிரமணிய சுவாமி, தெய்வானையுடன் தங்க சப்பரத்திலும், மாலையில் தங்கமயில் வாகனம், தங்க குதிரை வாகனம், வெள்ளி பூத வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இவ்விழாவின் சிகர நிகழ்ச்சியாக இன்று வைரத்தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர்.
















