ஊடுருவல்காரர்களுக்கு சிவப்பு கம்பளம் விரிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறீர்களா? என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் சரமாரியாக கேள்வி எழுப்பி உள்ளார்.
போலீஸ் காவலில் இருந்த ரோஹிங்கியா அகதிகள் 5 பேர் மாயமாகிவிட்டதாகவும், அவர்களை கண்டுபிடித்து நாடு கடத்த உத்தரவிட வேண்டும் எனவும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த தமைமை நீதிபதி சூர்யகாந்த், இந்தியாவுக்குள் சட்ட விரோதமாக ஊடுருவியவர்களுக்காக சட்டம் வளைந்து கொடுக்க வேண்டும் என எதிர்பார்க்கிறீர்களா என கேள்வி எழுப்பினார்.
சுரங்கம் தோண்டி உள்ளே நுழைந்துவிட்டு, இந்திய சட்டம் அவர்களுக்கும் பொருந்த வேண்டும் என கூறுவதை ஏற்க முடியாது எனவும் திட்டவட்டமாக தெரிவித்தார்.
ஊடுருவல்காரர்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறீர்களா? எனவும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த் காட்டமாக தெரிவித்தார்.
















