ரயிலுக்கு அடியில் தண்டவாளத்தில் அமர்ந்து ரொமான்ஸ் செய்த காதல் ஜோடி மயிரிழையில் உயிர் தப்பிய வீடியோ வெளியாகியுள்ளது.
காதலர்கள் இருவர் நின்றுகொண்டிருந்த சரக்கு ரயிலுக்கு அடியில் தண்டவாளத்தில் அமர்ந்து ரொமான்ஸ் செய்து கொண்டிருந்தனர்.
அப்போது திடீரெனச் சரக்கு ரயில் பலத்த சத்தத்துடன் மெதுவாக நகரத் தொடங்கியது. இதனால் அதிர்ச்சியடைந்த ஜோடி சுயநினைவுக்கு திரும்பி, தண்டவாளத்தில் இருந்து தவழ்ந்துசென்று விலகித் தங்கள் உயிரை காத்துக் கொண்டனர்.
ஒரு நொடி தாமதம் ஏற்பட்டிருந்தாலும் அவர்களின் உயிர் பறிபோயிருக்கும். இது தொடர்பான புகைப்படத்தைப் பகிர்ந்து ரயில்வே நிர்வாகமும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
















