இலங்கைக்கு நிவாரண உதவிகள் அனுப்ப இந்தியா வான்வெளியை தர மறுத்ததாகப் பாகிஸ்தான் ஊடகங்களில் வெளியான செய்தி பொய் என வெளியுறவுத்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
டிட்வா புயல் காரணமாக இலங்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நிவாரணப் பொருட்களை அனுப்பி வைக்க, இந்திய வான்வெளியைப் பயன்படுத்த அனுமதி மறுக்கப்பட்டதாகப் பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
இதற்கு வெளியுறவுத்துறை அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் கோரிக்கை விடுத்த 4 மணி நேரத்திலேயே மனிதாபிமான அடிப்படையில் அனுமதி வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் பாகிஸ்தான் ஊடகங்கள் வழக்கம்போல பொய் பிரசாரம் மேற்கொள்வாதகாவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
















