போர் விமானத்திலிருந்து அவசர காலத்தில் விமான பாதுகாப்பாக வெளியேறும் சோதனையை இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனம் வெற்றிகரமாக நடத்தியது.
அவசர காலங்களில் போர் விமானங்களிலிருந்து விமானிகள் பாதுகாப்பாக வெளியேறுவது சிக்கலாகவே இருந்து வருகிறது. இதனை சரி செய்யும் விதமாக இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதன்படி அவசர காலத்தில் விமானி, போர் விமானத்திலிருந்து பாதுகாப்பாக வெளியேறும் சோதனையை இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனம் வெற்றிகரமாக நடத்தியது.
இந்தச் சோதனை சண்டிகரின் டெர்மினல் பாலிஸ்டிக்ஸ் ஆராய்ச்சி ஆய்வகத்தில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் ராக்கெட் என்ஜின்கள் பொருத்தப்பட்ட ஸ்லெட்டை இயக்கி இந்தச் சோதனை நடத்தப்பட்டது.
மணிக்கு 800 கிலோ மீட்டர் வேகத்தில் போர் விமானம் செல்லும் போது அதிலிருந்து பாராசூட் உதவியுடன் பாதுகாப்பாக விமானி வெளியேறும் வகையில் சோதனை நடத்தப்பட்டது.
மேலும் இந்த புதிய தொழில்நுட்பம் எதிர்கால போர் விமானங்களில் பயன்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த சோதனை குறித்த வீடியோ காட்சிகளைப் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
















