தொடர் கனமழையால் வீராணம் ஏரியிலிருந்து 750 கனஅடி வீதம் உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோயிலில் உள்ள வீராணம் ஏரி சென்னையின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது.
இந்நிலையில் தொடர் கனமழையால் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் பாதுகாப்பு கருதி ஏரியில் இருந்து 750 கனஅடி வீதம் உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளதால் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
















