தமிழக அரசு பாசிச அரசாகவும், இந்து விரோத அரசாகவும் திகழ்வதாக இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் விமர்சித்துள்ளார்
இதுதொடர்பாக செய்தியாளரகளிடம் பேசிய அவர், தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்பதே இந்து மக்களின் விருப்பம் என தெரிவித்தார்.
தமிழக அரசு பாசிச, இந்து விரோத அரசாக திகழ்கிறது என்றும், சிறுபான்மையினர் வாக்குகளை பெற தமிழக அரசு ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாகவும் அவர் சாடினார்.
நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் தமிழக அரசு உள்நோக்கத்துடன் செயல்பட்டுள்ளது என்றும், இந்து விரோத திமுக அரசு 2026 சட்டமன்ற தேர்தலில் படுதோல்வி அடையும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
“144 தடை உத்தரவு பிறப்பித்தது முட்டாள்தனமான நடவடிக்கை என்றும், “அதிகாரத்தில் உள்ளவர்கள் உத்தரவுக்கு கட்டுப்படுவதாக காவல்துறை சொல்கிறது என்றும் காடேஸ்வரா சுப்பிரமணியம் கூறினார்.
















