திருப்பரங்குன்றம் தீபத்தூணில் கார்த்திகை தீபமேற்றப்பட வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பளித்தும், அறம்கெட்ட அறநிலையத்துறை அதனை செயல்படுத்தவில்லை என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கடுமையாக சாடியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மதுரை கிளையின் உத்தரவை அறம்கெட்ட அறநிலையத்துறை செயல்படுத்தவில்லை என்றும், நீதிமன்றத்தை மட்டுமின்றி முருகபெருமானை அவமதிக்கும் துறையாக மாறியுள்ளது என சாடினார்.
அறநிலையத்துறை அமைச்சராக சேகர்பாபு உள்ளது சாபக்கேடு என்றும், மே மாதத்திற்கு பின் திமுக ஆட்சியை மக்கள் தூக்கி எறிந்து விடுவார்கள் என்றும் அவர் கூறினார்.
மழைநீர் வடிகால் பணிகள் சரிவர மேற்கொள்ளப்படவில்லை என்றும், தொடர் மழையில் சிக்கி சென்னை மக்கள் தத்தளித்துக்கொண்டு இருப்பதாகவும் அவர் கூறினார்.
















