சிறுபான்மையினரை திருப்திபடுத்த திமுக அரசு முயல்வதாக இந்து முன்னணி மாநில பொதுச்செயலாளர் கிஷோர் குமார் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மதுரை திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அண்மையில் உத்தரவு பிறப்பித்தது. இந்த நிலையில், திருப்பரங்குன்றம் சென்ற இந்து முன்னணி மாநில பொதுச் செயலாளர் கிஷோர் குமார், கோயில் துணை ஆணையரை சந்தித்து நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்த வலியுறுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், மக்கள் பணி செய்வதை விடுத்து மத கலவரத்தை தூண்டும் வகையில் மதுரை எம்.பி சு.வெங்கடேசன் செயல்பட்டு வருவதாக தெரிவித்தார். சிறுபான்மையினரை திருப்திபடுத்த திமுக அரசு முயல்வதாக குற்றஞ்சாட்டிய அவர், நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தாவிட்டால் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தார்.
















