நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் புதிதாகப் போடப்பட்ட சாலையைப் பெயர்த்து ஒப்பந்ததாரரிடம் சரமாரியாகக் கேள்வி எழுப்பும் மக்களின் வீடியோ வைரலாகி வருகிறது.
அரியூர் நாடு அடுத்த குழிவளவு பகுதியில் இருந்து தேவக்காய்பட்டி வரை புதிதாகத் தார் சாலை போடப்பட்டது.
20 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட சாலைக்கு மேல் அமைக்கப்பட்ட தார் சாலை, தரமின்றி இருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த நிலையில், அப்பகுதியை சேர்ந்த சிலர், சாலையை பெயர்த்து, ஒப்பந்ததாரரிடம் சரமாரியாகக் கேள்வி எழுப்பினார். இந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
















