தன்னைவிட அழகாக இருந்ததாகக் கூறி 4 குழந்தைகளை கொன்ற சைக்கோ பெண் அரியானாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அரியானா மாநிலம் பானிபட் அருகில் உள்ள நவுதலா கிராமத்தில் திருமண மண்டபத்தில் விளையாடிக் கொண்டிருந்த 6 வயது சிறுமி மாயமானாள்.
இதையடுத்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் தேடிய நிலையில் மண்டபத்தின் ஒரு பகுதியில் பெரிய தண்ணீர் வாளியில் சிறுமியின் தலை நீரில் மூழ்கிய நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.
இச்சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், அங்குள்ள சிசிடிவி கேமராக்களலை ஆய்வு செய்தனர்.
அப்போது பூனம் என்ற பெண்ணுடன் சிறுமி சென்றது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் போலீசார் நடத்திய விசாரணை சிறுமியை கொலை செய்தது அம்பலமானது.
கொலைக்கான காரணம் குறித்து அந்தப் பெண் கூறியதை கேட்டுப் போலீசார் அதிர்ந்தனர். ஏனென்றால் அந்தப் பெண் தன்னை விட யாரும் அழகாக இருக்கக் கூடாது என்ற பொறாமையில் சிறுமியைக் கொன்றதாகக் கூறினார்.
தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் பூனம் இதுபோன்று 3 குழந்தைகளை கொன்றது தெரியவந்தது.
சைகோ பெண்ணின் இந்தக் கொடூர செயல் அரியானாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
















