திருப்பரங்குன்றம் வழக்கில் இந்து சமய அறநிலையத்துறைக்கு என்ன வேலை? - அண்ணாமலை கேள்வி!
Oct 12, 2026, 11:33 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திருப்பரங்குன்றம் வழக்கில் இந்து சமய அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – அண்ணாமலை கேள்வி!

Murugesan M by Murugesan M
Dec 4, 2025, 07:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தமிழக மக்களை ஒருவருக்கு ஒருவர் எதிராக நிறுத்தும் அநாகரிக அரசியல் நாடகங்களை திமுக எப்போது நிறுத்தப் போகிறது? என்று பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், 

திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் மலையின் மேற்பகுதியில் உள்ள தீபத்தூணில், கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி வழங்கிய மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, திமுக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டை, உயர்நீதிமன்ற மதுரை அமர்வு தள்ளுபடி செய்துள்ளது.

நேற்றைய தினம் திமுக அரசு, மாண்புமிகு உயர்நீதிமன்ற உத்தரவையும், முருகப் பெருமான் பக்தர்களின் நம்பிக்கையையும் வெளிப்படையாக மீறி, தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு பாதிக்கப்படும் ஆபத்தை உருவாக்கியிருக்கும் நிலையில், இன்று இந்த தீர்ப்பு வந்துள்ளது.

பிரிவினைவாத எண்ணத்துடன் செயல்படும் திமுக அரசு, இந்த சூழ்நிலையைத் திட்டமிட்டு உருவாக்கியிருக்கிறது. கடந்த டிசம்பர் 2ஆம் தேதி அன்றே, இந்து சமய அறநிலையத் துறையை முறைகேடாகப் பயன்படுத்தி, அவசரமாக மேல்முறையீடு செய்ய வைத்தும், பின்னர் அவ்வழக்கில் அலட்சியம் காட்டி, காலம் தாழ்த்தியும் வந்த திமுக அரசு, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்ட பிறகே பதிலளிக்க முன்வருகிறது.

மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை மீறி, பக்தர்களின் பாதுகாப்புக்காக உயர்நீதிமன்றம் நியமித்த CISF, மற்றும் மாநில காவல்துறை இடையே தேவையற்ற மோதலை உருவாக்கி, இறுதியில் 144 தடையுத்தரவையும் பிறப்பித்தது திமுக அரசு. இந்த வழக்கில் தமிழக இந்து சமய அறநிலையத்துறைக்கு என்ன வேலை? என்று அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.

நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மனு அளிக்க வேண்டிய தேவை இருப்பது, அது தர்கா நிர்வாகம் மட்டுமே . ஆனால் அவர்கள் மேல்முறையீடு செய்யவில்லை. ஏனெனில், சிக்கந்தர் தர்கா அருகிலுள்ள தீபத் தூணில், கார்த்திகை தீபம் ஏற்றப்படுவது குறித்த வரலாறும், இரு தரப்பு ஒப்பந்தமும் இருப்பதை தர்கா நிர்வாகிகள் நன்கு அறிவார்கள் என்று அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.

தமிழக மக்களை ஒருவருக்கு ஒருவர் எதிராக நிறுத்தும் தங்கள் அநாகரிக அரசியல் நாடகங்களை திமுக எப்போது நிறுத்தப் போகிறது? திமுக அரசு குறைந்தபட்சம் இனியாவது உயர்நீதிமன்ற உத்தரவை மதிப்பார்களா, அல்லது தங்கள் வழக்கமான பிரிவினை நாடகங்களைத் தொடரப் போகிறார்களா? என்று அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.

Tags: சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் மலைbjpDMKதிருப்பரங்குன்றம்mkstalinWhat is the role of the Hindu Religious and Endowments Department in the Thiruparankundram case? - Annamalai raises a question
Share
Tweet
SendShare
Previous Post

அரியானா : பொறாமையில் 4 குழந்தைகளை கொன்ற சைக்கோ பெண்!

Next Post

இந்து விரோத திமுக அரசுக்குக் கிடைத்த சவுக்கடி – நயினார் நாகேந்திரன்

Related News

இந்து முன்னணி பொறுப்பாளர்கள் 4 பேர் கைது; காடேஸ்வரா சுப்பிரமணியம் கண்டனம்

தமிழ்ச் சமூகத்தின் பெருமைபடுத்தும் பிரதமர்; பாஜக மையக்குழு பாராட்டு

அன்பில் மகேசுக்கு எதிரான வழக்கு; மத்திய குற்றப்பிரிவு தீவிரம்

அதிமுக அதிருப்தி எம்.எல்.ஏக்கள் ஆலோசனை; கட்சிக்குள் மீண்டும் சலசலப்பு

அதிமுக எம்எல்ஏக்கள் 6 பேரின் ராஜினாமா வழக்கு; உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பு

ஆளுநரின் அதிகாரம் பற்றி திமுக எப்போது பேச ஆரம்பித்தது? உயர் நீதிமன்றம் கேள்வி!

Load More

அண்மைச் செய்திகள்

பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு; ராபர்ட் ஹால், மைக்கேல் வுட்ஃபோர்டுக்கு பகிர்ந்தளிப்பு

பாகிஸ்தான் மாகாணங்களை பிரிக்க அசிம் முனீர் முயற்சி? : அதிகாரத்தை கைப்பற்றும் திட்டம் என சந்தேகம் – சிறப்பு தொகுப்பு!

பூந்தமல்லி – வடபழனி மெட்ரோ ரயிலில், 5 மணிநேரத்தில் 25,000 பேர் பயணம்!

தலைமை செயலகத்திலும் மின்தடையா? அன்புமணி அதிர்ச்சி!

எஃப்-35 ரக போர் விமானத்தின் அருகில் கூட அமெரிக்க படையினர் அனுமதிப்பதில்லை – விமானப்படைத் தலைமைத் தளபதி ஏ.பி.சிங்

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏக்கள் பதவியேற்பு!

நாவலூர் அருகே பழுதடைந்த மழை நீர் வடிகால் குழாயை மாற்ற சென்ற பஞ்சாயத்து அலுவலர்கள் – சமூக விரோதிகள் மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு!

நவராத்திரி விழா – சென்னையில் நடைபெறும் ‘ஜென் ஸீ பஜன்’ இசை நிகழ்ச்சி!

சென்னை மக்கள் மாளிகையில் நவராத்திரி கொலு கண்காட்சி – ஆளுநர் அர்லேகர் தொடங்கி வைத்தார்!

Make in India மீது மோகம் : சீனாவுக்கான இந்திய ஏற்றுமதி 39% அதிகரிப்பு – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies