மேகமலை வனப்பகுதியில் வசிக்கும் அரசு ஊழியர்களை வெளியேற்றும் நடவடிக்கைக்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
தேனி மாவட்டம், வருசநாடு மற்றும் மேகமலை பகுதிகளில் வசிக்கும் அரசு ஊழியர்களை வெளியேற்றும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் சங்கம் சார்பில் மனு அளிக்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விவசாயச் சங்க தலைவர் மருதபாண்டி, 118 அரசு ஊழியர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்காமல், மிரட்டல் போக்கில் வெளியேற்ற முயல்வது சட்டவிரோதமானது என கூறினார். உச்சநீதிமன்றத் தீர்ப்பில் சட்ட முரண்பாடுகள் இருப்பதாகக் கூறிய அவர், தமிழக அரசு மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய தாமதித்தால், விவசாயிகள் சார்பில் மனு தாக்கல் செய்யவுள்ளதாக தெரிவித்தார். மேலும், அதிகாரிகள் மிரட்டல் போக்கை கைவிட்டு சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
















