இந்துக்களின் உரிமையை திமுக அரசு பறிப்பதாக பாஜக தேசிய சிறுபான்மை பிரிவு செயலாளர் வேலூர் இப்ராஹிம் குற்றஞ்சாட்டியுள்ளார்.’
ராணிப்பேட்டையில் உள்ள ரத்தினகிரி பாலமுருகன் கோயிலுக்கு சென்று வழிபட்ட பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், தமிழகத்தில் வாழும் 80 சதவீத இந்துக்களின் உரிமையை திமுக அரசு பறிப்பதாக குற்றஞ்சாட்டினார். சனாதன தர்மத்தையும், இந்து தர்மத்தையும் திமுக அரசு புறக்கணிப்பதாகவும் குறை கூறினார்.
















