திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து திமுக எம்.பி-க்கள் வழங்கிய ஒத்திவைப்பு நோட்டீசை ஏற்க மாநிலங்களவை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் மறுப்பு தெரிவித்தார்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த திங்கட்கிழமை தொடங்கியது. அப்போதில் இருந்தே பல்வேறு விவகாரங்களை முன்னிறுத்தி திமுக எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.
5-வது நாள் கூட்டத்தொடரான இன்று, அவையை ஒத்திவைத்துவிட்டு திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து விவாதம் நடத்தக்கோரி திமுக எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக திருச்சி சிவா உள்ளிட்ட எம்.பி.க்கள் அளித்த கடிதத்தை மாநிலங்களவை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் நிராகரித்தார். இதனால் அமளியில் ஈடுபட்ட திமுக எம்.பி-க்கள், அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
















