ஹாக்கி ஜூனியர் உலகக் கோப்பைத் தொடரின் காலிறுதி சுற்றில் பெல்ஜியமை வென்று இந்திய அணி அரையிறுதிக்குள் சென்றது.
நவம்பர் 28-ம் தேதி தமிழகத்தில் தொடங்கிய ஹாக்கி ஜூனியர் உலகக் கோப்பைத் தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன்படி கால் இறுதி போட்டிகள் சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் காலிறுதி சுற்று போட்டி நடந்தது.
இதில் ரோஹித் தலைமையிலான இந்திய அணி, பலம் வாய்ந்த பெல்ஜியத்தை எதிர்கொண்டது. அப்போது 3 க்கு 3 புள்ளிகளில் இரு அணிகளும் இருக்க, இந்தியா தனது கடைசி வாய்ப்பில் கோல் அடித்து 4 க்கு 3 புள்ளிகளில் வென்று அரையிறுதிக்குச் சென்றது.
பெனால்ட்டி ஷூட் அவுட்டில் பெல்ஜியத்தின் இரு வாய்ப்புகளை முறியடித்த இந்திய கோல் கீப்பர் பிரின்ஸ் தீப் சிங் ஆட்டநாயகன் விருது வென்றார். நாளை நடைபெறும் அரையிறுதிப் போட்டிகளில், ஸ்பெயினை இந்தியாவும், ஜெர்மனியை அர்ஜென்டினாவும் எதிர்கொள்ளவுள்ளது குறிப்பிடத்தக்கது.
















