இந்தியா வந்த ரஷ்யா அதிபர் புதினுக்கு பாரம்பரியமிக்க பொருட்களை பிரதமர் மோடி பரிசாக வழங்கினார்.
இந்தியா – ரஷ்யா வருடாந்திர உச்சி மாநாட்டில் பங்கேற்க டெல்லி வந்தடைந்த ரஷிய அதிபர் புடினுக்கு பிரதமர் மோடி பல்வேறு கலைநயமிக்க பரிசுப் பொருட்களை வழங்கினார்.
அசாம் தேயிலை, முர்ஷிதாபாத் சில்வர் தேநீர் கோப்பை, கைவினைஞர்கள் உருவாக்கிய சில்வர் குதிரை, ஆக்ரா மார்பிள் செஸ் செட், காஷ்மீர் குங்குமம் மற்றும் ரஷ்ய மொழியில் மொழி பெயர்க்கப்பட்ட பகவத் கீதை ஆகியவை ரஷ்ய அதிபர் புடினுக்கு பிரதமர் மோடி பரிசளித்தார்.
















