திருப்பரங்குன்றம் கோயில் விவகாரத்தில் திமுக மலிவான அரசியல் செய்வதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக டெல்லியில் அவர் அளித்த பேட்டியில்,
திருப்பரங்குன்றம் மலைமீது ஏறிச் சுவாமி தரிசனம் செய்யத் திமுக அனுமதி மறுக்கிறது என்றும் திருப்பரங்குன்றம் சென்ற பாஜக தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று அவர் குறிப்பிட்டார்.
திருப்பரங்குன்றம் கோயில் விவகாரத்தில் திமுக மலிவான அரசியல் செய்கிறது என்றும் பக்தர்களின் வழிபாட்டு உரிமையை தடுக்க, திமுகவுக்கு எந்த அருகதையும் இல்லை என அவர் கூறினார்.
நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகும் திருப்பரங்குன்றம் மலைக்குச் செல்ல தடை விதிக்கபட்டுள்ளது என்றும் உத்தரப் பிரதேசத்தைப் போலவே தமிழ்நாட்டிலும் வளர்ச்சி வேண்டும் என்றும் உத்தரப் பிரதேசத்தில் சட்டம் – ஒழுங்கு சிறப்பாக உள்ளது என்று எல்.முருகன் தெரிவித்தார்.
திமுக சிறுபான்மையினரை திருப்திப்படுத்தும் அரசியலை விளையாடுகிறது என்றும் திமுகவினருக்கு கோயில்களில் நம்பிக்கை இல்லையென்றால், ஏன் நிர்வகிக்கிறார்கள்? என்று எல்.முருகன் கேள்வி எழுப்பி உள்ளார்.
















