அம்பேத்கரின் நினைவு தினத்தையொட்டி சென்னை துறைமுக வளாகத்தில் உள்ள அவரது சிலைக்குப் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மரியாதை செலுத்தினார்.
சட்ட மேதை அண்ணல் அம்பேத்கரின் 69வது நினைவுத் தினம் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.
இதையொட்டி சென்னை ஜார்ஜ் டவுன் பகுதியில் இருந்து துறைமுகம் வரை பாஜக சார்பில் பேரணி நடைபெற்றது.
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்தப் பேரணியில் கரு.நாகராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அம்பேத்கர் நினைவு தினத்தையையொட்டி அவரது புகழ்பாடி ஜோதியை ஏந்தி பாஜகவினர் பேரணியாகச் சென்றனர்
தொடர்ந்து துறைமுக வளாகத்தில் உள்ள அம்பேத்கரின் சிலைக்குப் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினார்.
















