புதுச்சேரி ஆரோவில் இலக்கிய விழா நடைபெற உள்ளதை அடுத்த அது தொடர்பான உயர்மட்ட நிர்வாக குழுக் கூட்டம் நடைபெற்றது.
புதுச்சேரியில் ஆரோவில் அறக்கட்டளை சார்பில், சர்வதேச ஆரோவில் இலக்கிய விழா வரும் 15ம் தேதி முதல் 21ம் தேதி வரை நடைபெற உள்ளது.
இது தொடர்பான உயர்மட்ட ஆலோசனை கூட்டம் ஆரோவில் இன்று நடைபெற்றது. இதில் அறக்கட்டளை செயலாளரும், குஜராத் கூடுதல் தலைமை செயலாளருமான ஜெயந்தி ரவி, முன்னாள் அரசு அதிகாரிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
அப்போது எந்தெந்த தேதிகளில் மொழிவாரியான இலக்கிய விழா நடத்துவது என்பது குறித்து இறுதி முடிவு செய்யப்பட்டது.
நிகழ்ச்சியில் பங்கேற்க மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், மன்சுக் மாண்டவியா மற்றும் ஜோஹோ நிறுவன தலைமை விஞ்ஞானி ஸ்ரீதர் வேம்பு உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக ஆரோவில் அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
















