தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே மகன் கொலை செய்யப்பட்ட விரக்தியில் தாய் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சங்கரன்கோவில் அடுத்த பச்சேரி கிராமத்தைச் சேர்ந்த சங்கரலிங்கம், மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
தடுக்கச் சென்ற மனைவி படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், மகனின் இழப்பைத் தாங்க முடியாத தாய் அழகுநாச்சி, விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
இதையடுத்து அவரை மீட்ட அக்கம் பக்கத்தினர், அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
















