சென்னை விமான நிலையத்தில் இன்றும் 84 இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.
மத்திய அரசு பிறப்பித்துள்ள புதிய விதிகளின்படி கூடுதல் ஆட்களை நியமிக்காமல், குறைவான விமானிகள் மற்றும் பணியாளர்களுடன் சேவையை தொடர்ந்ததால் இண்டிகோ நிறுவனம் கடும் பாதிப்பை சந்தித்தது.
கடந்த 5 நாட்களாக நாடு முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், சென்னை விமான நிலையத்தில் 5வது நாளாக 84 இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
சென்னையில் இருந்து தோகா செல்லும் விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், ஹைதராபாத் வழியாக தோகா செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், கொழும்பு, யாழ்ப்பாணம், பாங்காக் செல்லும் இன்டிகோ விமானங்கள் தொடர்ந்து இயக்கப்படுகிறது என்றும், சென்னையில் இருந்து தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு விமான சேவைகள் தொடர்கின்றன எனவும் கூறப்பட்டுள்ளது. இருப்பினும், சென்னை விமான நிலையத்தில் பயணிகளின் வருகை குறைவாக காணப்படுகிறது.
















