ஆயிரத்து 20 கோடி ரூபாய் டெண்டர் ஊழல் குறித்து தமிழக அரசு வழக்குப்பதிவு செய்து விசாரிக்க வேண்டுமென பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தி உள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் டெண்டர் பணிகளை வழங்க ஒப்பந்த நிறுவனங்களிடம் இருந்து ஆயிரத்து 20 கோடி ரூபாய் கையூட்டு வாங்கப்பட்டிருப்பதாக அமலாக்கத்துறை கூறியுள்ளது.
அதிர்ச்சியளிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. திமுக எந்த அளவுக்கு ஊழலில் திளைக்கும் கட்சி என்பதற்கு இதை விட வலிமையான ஆதாரம் ஏதும் இருக்க முடியாது எனக் கூறியுள்ள அவர், திமுகவினர் ஆட்சி செய்வதே ஊழல் செய்வதற்காகதான் என்பது தற்போது அம்பலமாகி உள்ளதாகவும் குற்றம்சாட்டி உள்ளார்.
இந்த ஊழல் குறித்தும், ஏற்கனவே ஆதாரங்கள் வழங்கப்பட்ட இரு ஊழல்கள் குறித்தும் தமிழக காவல்துறை உடனடியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என அவர் வலியுறுத்தி உள்ளார்.
















