இண்டிகோ விமான சேவைகள் ரத்து விவகாரத்தில் முழு தகவல் தெரியாமல் பேசக் கூடாது என்று காங்கிரஸ் எம்பி ராகுலுக்கு விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், இது ஒரு அரசியல் விவகாரம் அல்ல, பொதுப் பிரச்னை எனக் கூறியுள்ளார்.
ஒப்பந்த செலவுகளைக் குறைத்து, அதிக விமானங்களை அனுமதிக்கும் வகையில் சட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளோம் என்றும், இண்டிகோ விமான நிறுவனத்தின் தோல்விக்கு மத்திய அரசின் அணுகுமுறையே காரணம் எனக்கூறிய ராகுலின் பேச்சு ஏற்புடையது அல்ல எனவும் குறிப்பிட்டுள்ளார்.
















