ரயில் மோதி யானைகள் உயிரிழப்பதை தடுக்கும் செயற்கை தொழில்நுட்பத்தை மேலும் பல பகுதிகளில் விரிப்படுத்த உள்ளதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
ரயில் பாதைகளில் யானைகள் பலியாவதை தடுக்க, ஏஐ தொழில்நுட்பத்துடன் செயல்படும் ஐடிஎஸ் எனப்படும் ஊடுருவல் கண்டறிதல் அமைப்பு, வடகிழக்கு மாநிலங்களில் தற்போது பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் விரைவில் நாடு முழுதும் பல்வேறு வழித்தடங்களில் 981 கிலோ மீட்டருக்குத் திட்டத்தை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வமாகப் பதிலளித்துள்ளார்.
















