பாகிஸ்தானும், ஜனநாயகமும் இணைந்து ஒரே பாதையில் பயணிக்க முடியாது என, வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் பேட்டியளித்த அவர், பாகிஸ்தானில் நடைபெற்று வரும் ஒவ்வொரு நிகழ்வையும் உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், ஆப்கானிஸ்தான் மக்கள் மீது அந்நாடு நடத்தி வரும் தாக்குதல்களை கண்டிப்பதாகவும் கூறினார்.
, ஆப்கானிஸ்தானின் பிராந்திய ஒருமைப்பாடு, இறையாண்மை மற்றும் சுதந்திரத்தை இந்தியா ஆதரிப்பதாகவும் குறிப்பிட்டார்.
சீனா குறித்து பேசிய ரந்தீர் ஜெய்ஸ்வால், இரு நாட்டு உறவு நேர்மறையான பாதையில் பயணித்து வருவதாக தெரிவித்தார். இந்தியாவுக்கு எதிரான தீவிரவாத அமைப்புகளுக்கு எதிராக இங்கிலாந்து அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளை வரவேற்ற அவர், இதன் மூலம் பயங்கரவாதத்திற்கு எதிரான உலகளாவிய முயற்சி வலுப்பெறும் என கூறினார்.
















