இலங்கையின் கிளிநொச்சி மாவட்டத்தில் ‘டிட்வா’ புயலால் சேதமடைந்த பாலத்தை சீரமைக்கும் பணியில் இந்திய ராணுவ குழு ஈடுபட்டுள்ளது.
டிட்வா புயலின்போது, பரந்தன் – முல்லைத்தீவு பகுதியில்
அமைந்துள்ள பாலம் ஒன்று சேதமடைந்தது. இதனை புனரமைக்கும் பணியில் ஈடுபட இந்திய ராணுவத்தின் பொறியியல் படைப்பிரிவு அதிகாரிகள் குழு கிளிநொச்சிக்கு சென்றது.
அக்குழு, இந்தியாவில் இருந்து கொண்டு செல்லப்பட்ட தற்காலிக இரும்புப் பாலத்தை பொருத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது. விரைவில் அந்த பணி முடிக்கப்பட்டு, போக்குவரத்து வசதி ஏற்படுத்தி தரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
















