சென்னை சேத்துப்பட்டில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் முன்னாள் தேர்தல் ஆணையர் கோபால் சுவாமி, எழுத்தாளர் சுதா சேஷய்யன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சின்மயா மிஷன் சென்னை மற்றும் வித்யா பாரதி தமிழ்நாடு சார்பில் NCF, NEP 2020 வழிகாட்டுதல்களுக்கு சமூக அறிவியல் பாடநூல் தொடர் RRR புத்தகங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இதன் வெளியீட்டு விழா சென்னை சேத்துப்பட்டில் உள்ள சின்மயா ஹெரிடேஜ் அரங்கத்தில் நடைபெற்றது.
இதில் ஆன்மிக வழிகாட்டி சுவாமி மித்ரானந்தா, எழுத்தாளர் சுதா சேஷய்யன், முன்னாள் தேர்தல் ஆணையர் கோபால் சுவாமி ஆகியோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து அவர்கள் 6 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பாட புத்தகங்களை வெளியிட்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய சுதா சேஷய்யன், திருவண்ணாமலை பாறைகள் 4 ஆயிரம் மில்லியன் ஆண்டுகள் பழமையானவை என தெரிவித்தார். பல ஆண்டுகளாக நமது சொந்த வரலாற்றிலிருந்து நம்மை விலக்கி வைத்துள்ளார்கள் என்றும் அவர் கூறினார்.
தொடர்ந்து பேசிய முன்னாள் தேர்தல் ஆணையர் கோபால் சுவாமி இந்தியர்கள் பல நூற்றாண்டுகளாகவே கடல் பயணம் மேற்கொண்டவர்கள் என தெரிவித்தார். வெளிநாடுகளுக்குச் சென்ற இந்தியர்கள் தங்கள் உழைப்பால், வெற்றி பெற்றார்கள் என்றும் அவர் கூறினார்.
















