தாய்லாந்து – கம்போடிய எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ளதால் பள்ளிகளில் இருந்து ஏராளமான குழந்தைகள் வீடுகளுக்கு ஓட்டம் பிடித்த காட்சிகள் வெளியாகி உள்ளன.
தென்கிழக்கு ஆசிய நாடுகளான கம்போடியா, தாய்லாந்து இடையே நீண்ட காலமாக எல்லை பிரச்னை நிலவி வருகிறது.
இரு நாட்டு எல்லையில் அமைந்துள்ள கோயில்கள் யாருக்கு சொந்தம் என்ற விவகாரம் நீண்ட நாட்களாகத் தீர்க்கப்படாமல் உள்ளது.
அவ்வப்போது இரு நாட்டு ராணுவத்தினரும் மோதிக் கொண்ட நிலையில் கடந்த ஜூலை மாதம் இருநாட்டு ராணுவத்தினரும் முழுவீச்சில் போர் நடத்தினர். இரு தரப்பிலும் சேர்ந்து 43 பேர் கொல்லப்பட்டனர்.
அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் சர்வதேச நாடுகள் முன்னின்று நடத்திய பேச்சு வார்த்தையைத் தொடர்ந்து இரு நாடுகளும் போர் நிறுத்த ஒப்பந்தம் செய்து கொண்டன.
இந்நிலையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிக் கம்போடியா மற்றும் தாய்லாந்து ராணுவத்தினர், ஒருவர் மீது இன்னொருவர் தாக்குதல் நடத்த தொடங்கியுள்ளதால் எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் தாக்குதல் காரணமாக இருநாடுகளுக்கு இடையேயான எல்லைப்பகுதியில் உள்ள பள்ளிகளில் இருந்து ஏராளமான குழந்தைகள் வீடுகளுக்கு ஓட்டம் பிடித்தனர்.
















