மதுரை விஸ்வநாதபுரம் பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் மாணவர்கள் மோதிக்கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மதுரை விஸ்வநாதபுரம் பகுதியில் அரசு உதவி பெறும் பள்ளி செயல்படுகிறது. அங்குப் பயிலும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் இரண்டு குழுக்களாகப் பிரிந்து ஆசிரியர்கள் முன்பே ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டுள்ளனர்.
இதனையடுத்து ஆசிரியர்கள் அவர்களை தடுக்க முற்பட்டும், மாணவர்கள் ஒருவரை ஒருவர் விரட்டிச் சென்று தாக்கியுள்ளனர்.
தகவலறிந்து சென்ற போலீசார் தாக்குதலில் ஈடுபட்ட மாணவர்களை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில், பள்ளியின் சுற்றுவட்டார பகுதிகளில் போதை பொருட்கள் அதிக அளவில் விற்பனை செய்யப்படுவதாகவும், இதனால் இது போன்ற மோதல்கள் அடிக்கடி நடைபெறுவதாகவும் பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
















