முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி மீது அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கு விசாரணையை ஒத்தி வைக்கச் சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாகக் கூறி மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதனை அடிப்படையாகக் கொண்டு சட்ட விரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், சிறப்பு நீதிமன்றத்தில் உள்ள வழக்கின் விசாரணை முடியும் வரை அமலாக்கத்துறை வழக்கைத் தள்ளி வைக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இதனை விசாரித்த நீதிபதிகள் வழக்கு விசாரணையை ஒத்தி வைக்க மறுப்பு தெரிவித்து மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
















