திருப்பரங்குன்றம் தீபத்தூணில் விளக்கேற்றும் நீதிமன்ற உத்தரவை அவமதித்த வழக்கில் அறிவாலய அரசின் இரட்டை வேடத்தை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தோலுரித்துக் காட்டியுள்ளதாக தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள பதிவில், இந்த வழக்கு வெறும் தீபம் ஏற்றும் உரிமை சார்ந்தது மட்டுமல்ல, சொத்துரிமை தொடர்பானதும் கூட என அடிக்கோடிட்டுக் காட்டியதோடு, இதற்கு முன் கன்னியாகுமரி, திண்டுக்கல் எனப் பல்வேறு மாவட்டங்களில் இந்துக்களின் வழிபாட்டு உரிமை தொடர்பான வழக்குகளில் வேண்டுமென்றே நீதிமன்ற உத்தரவைத் திமுக அரசு அவமதித்துள்ளதைச் சுட்டிக்காட்டி திமுகவின் போலி மதச்சார்பின்மையை நீதிமன்றம் வெளிப்படுத்தியது மகிழ்ச்சியளிக்கிறது என தெரிவித்துள்ளார்.
மேலும், 200 காவலர்களைக் கொண்டு தீபமேற்றவிடாமல் தடுத்ததோடு, வேண்டுமென்றே தப்புந்தவறுமாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவைச் சமர்ப்பித்து தீபமேற்றுவதைத் தடுக்கும் திமுக அரசின் திட்டத்தையும் வெளிப்படுத்தி குட்டு வைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.
காரத்திகை திருநாளில் ஏவல்துறையை வைத்துத் தடுத்ததோடு நில்லாமல் நீதியை நிலைநாட்டவிடக் கூடாது என்பதற்காகப் பதவி நீக்கப் பிரமாணம் தாக்கல் செய்வது வரை தன்னாலான அனைத்து முயற்சிகளையும் செய்து தமிழர்களின் வழிபாட்டு உரிமையைப் பறிக்க முயலும் அறிவாலயஅரசின் கொட்டம், வரும் சட்டமன்றத் தேர்தலில் தமிழக மக்களால் அடக்கப்படும் என நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
















