இந்திய அரிசி மற்றும் கனடா நாட்டு உரங்களுக்கு புதிய வரிகளை விதிக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் முடிவு செய்துள்ளார்.
அமெரிக்க விவசாயிகளுக்கான 12 பில்லியன் நிதி உதவியை அறிவிப்பது தொடர்பாக வெள்ளை மாளிகையில் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய டிரம்ப், குறைந்த விலையில் அமெரிக்க சந்தையில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களால் உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு சவாலாக உள்ளது என்றார்.
பெரும்பாலான உரங்கள் கனடாவில் இருந்து இங்கே வருகின்றன என்று கூறிய டிரம்ப் தேவைப்பட்டால் அவற்றின் மீது கடுமையான வரிகளை விதிப்போம் என்று கூறினார்.
















