திருப்பதி ஏழுமலையான் கோயில் கலப்பட நெய் ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட இருவரை 4 நாள் SIT விசாரணைக்கு நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு பிரசாதத்தில் நெய் கலப்படம் செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக 16வது குற்றவாளியாக பட்டியலிடப்பட்ட டெல்லியைச் சேர்ந்த சுகந்த் ஆயில் அண்ட் கெமிக்கல்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரான அஜய் குமார் சுகந்த் கடந்த மாதம் 7 ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.
அதேபோல், 29வது குற்றவாளியாகக் குறிப்பிடப்பட்டுள்ள தேவஸ்தான முன்னாள் பொது மேலாளர் சுப்பிரமணியத்தை கடந்த மாதம் 27ம் தேதி கைது செய்தனர்.
இதனையடுத்து இருவரையும், காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு சிறப்பு விசாரணை குழு நெல்லூரில் உள்ள ஏசிபி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது. இந்நிலையில், வரும் 12ஆம் தேதி வரை சிறப்பு விசாரணை குழு காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
















