கடந்த 6 ஆண்டுகளில் நக்சல் அமைப்பைச் சேர்ந்த 29 முக்கிய கமாண்டர்கள் கொல்லப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மக்களவையில் எழுப்பப்பட்ட துணைக் கேள்வி ஒன்றுக்கு மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் அளித்த பதிலில், நக்சல் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் எண்ணிக்கை கடந்த 2014இல் 10ஆக இருந்தத நிலையில் தற்போது 5ஆகக் குறைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் நக்சல் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் எண்ணிக்கை 126இல் இருந்து 11ஆகக் குறைந்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டில் இருந்து இதுவரை நக்சல் அமைப்பைச் சேர்ந்த 29 முக்கிய கமாண்டர்களை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றுள்ளனர் என்றும் அமைச்சர் நித்யானந்த் ராய் தனது பதிலில் தெரிவித்துள்ளார்.
















