திருப்பரங்குன்றம் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் உள்ள கல்லத்தி மரத்தில் நிலா பிறை போட்ட இஸ்லாமிய கொடியை அகற்றிவிட்டு சேவல் கொடி ஏற்ற வேண்டும் என கோவில் நிர்வாகத்திடம் இந்து மக்கள் கட்சி மனு அளித்துள்ளது.
திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள கல்லத்தி மரம் மலை மீது உள்ள தர்காவில் இருந்து 100 மீட்டர் தொலைவில் கோயில் நிர்வாகத்திற்கு சொந்தமான இடத்தில் இருக்கிறது. இந்நிலையில் பல ஆண்டுகளாக சந்தனக்கூடு விழாவின்போது தர்காவிற்குள் உள்ள கொடிமரத்தில் மட்டும் நிலா பிறை போட்ட சிவப்பு கொடியை தர்கா நிர்வாகம் ஏற்றி வந்தது.
ஆனால் தற்போது கொடிமரத்திலும், கோயிலுக்கு சொந்தமான இடத்தில் உள்ள கல்லத்தி மரத்திலும் அந்த கொடியை ஏற்றுவதாக கூறப்படுகிறது.
இதற்கு ஆட்சபனை தெரிவித்துள்ள இந்து மக்கள் கட்சி, நிலா பிறை போட்ட சிவப்பு கொடியை அகற்றிவிட்டு அதற்கு பதிலாக அங்கு சேவல் கொடியை ஏற்ற வேண்டும் என திருப்பரங்குன்றம் கோயில் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
















