அண்டை நாடுகளை ஒப்பிடும்போது இந்தியாவில் ரயில் கட்டணம் மிகவும் குறைவாகவே வசூலிக்கப்படுவதாக ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவி தெரிவித்துள்ளார்,
மக்களவையில் கேள்வி நேரத்தின்போது பேசிய காங்கிரஸ் கட்சியின் கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் விஷ்ணு பிரசாத், பண்ருட்டி ரயில் நிலையத்தையும் அம்ருத் பாரத் திட்டத்தின் கீழ் தரம் உயர்த்த வேண்டும் எனவும், கொரோனா காலத்திற்கு முன்பு மூத்த குடிமக்களுக்கு வழங்கப்பட்டு வந்த ரயில் கட்டண சலுகைகள் மீண்டும் அமல்படுத்தப்படுமா? எனவும் அவர் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த, ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், கடலூர் தொகுதிக்குட்பட்ட திருப்பாதிரிபுலியூர் ரயில் நிலையத்தை மேம்படுத்துவதற்காக 6 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருப்பதாக கூறினார்.
அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் 77 ரயில் நிலையங்கள் தரம் உயர்த்தப்பட்டு இருப்பதாக தெரிவித்த அவர், கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் இன்னும் 2 ரயில் நிலையங்களை தரம் உயர்த்த வேண்டும் என கேட்டு இருக்கிறார் என்றும், அது குறித்து பரிசீலிக்கப்படும் என கூறினார்.
அண்டை நாடுகளை ஒப்பிடும்போது இந்தியாவில் மிகவும் குறைவாகவே ரயில் கட்டணங்கள் வசூலிக்கப்படுவதாகவும் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.
















