நெல்லையப்பர் கோயிலில் நடிகர் தனுஷ் சாமி தரிசனம் செய்தார்.
நடிகர் தனுஷ் நடிப்பில், இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் டி 54 என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. நெல்லை, தென்காசி மாவட்டத்தை சுற்றியுள்ள பகுதிகளில் நடந்த வந்த திரைப்படத்தின் பெரும் பகுதி முடிக்கப்பட்ட நிலையில், அதிகாலை நெல்லையப்பர் கோயிலில் நடிகர் தனுஷ் மற்றும் இயக்குநர் விக்னேஷ் ராஜா ஆகியோர் சாமி தரிசனம் செய்தனர்.
அதிகாலையில் நடைபெற்ற திருவனந்தல் வழிபாட்டில் பங்கேற்ற இருவருக்கும் கோயில் நிர்வாகம் சார்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. அப்போது, கோயிலில் இருந்த பக்தர்கள் நடிகர் தனுஷ் உடன் செல்பி மற்றும் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.
















