பன்னெடுங்காலமாக பாரதத் திருநாட்டில் கொண்டாடப்படும் நமது தீபாவளிப் பண்டிகை @UNESCO -வின் உலக கலாச்சார பாரம்பரிய பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நன்றி தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள பதிவில், தீப ஒளியேற்றிக் கொண்டாடப்படும் நமது தீபாவளித் திருநாளுக்கு உலகளாவிய அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதன் மூலம், பாரதக் கலாச்சாரத்தின் மகத்துவம் உலகெங்கும் பறைசாற்றப்படும்.
மேலும், நமது வருங்கால சந்ததியினருக்குப் பாரம்பரிய பண்டிகைகளையும் பண்பாட்டையும் பாதுகாக்க உந்துதலளிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த இனிய தருணத்தில், இத்தகைய சிறப்புமிக்க அங்கீகாரம் நமது தீபாவளிப் பண்டிகைக்குக் கிடைக்க வழிவகுத்து, உறுதுணையாக இருந்த பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு நயினார் நன்றி தெரிவித்துள்ளார்.
















