நாடாளுமன்றத்தில் நீதிபதிக்கு எதிரான தீர்மானத்தை எம்பி-க்கள் தோற்கடிக்க வேண்டும் - காடேஸ்வரா சி. சுப்பிரமணியம்
Mar 15, 2026, 09:12 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாடாளுமன்றத்தில் நீதிபதிக்கு எதிரான தீர்மானத்தை எம்பி-க்கள் தோற்கடிக்க வேண்டும் – காடேஸ்வரா சி. சுப்பிரமணியம்

Ramamoorthy S by Ramamoorthy S
Dec 10, 2025, 06:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாடாளுமன்றத்தில் நீதிபதி  ஜிஅர் சுவாமிநாதனுக்கு எதிரான தீர்மானத்தை எம்பி-க்கள் தோற்கடிக்க வேண்டும்  என இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

அவர் விடுதுள்ள பதிவில் தெரிவித்துள்ளதாவது :

“திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றும் வழக்கில் தீர்ப்பு கூறிய காரணத்திற்காக நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் மீது திமுகவும் காங்கிரஸ் கட்சியும் பாராளுமன்றத்தில் பதவி நீக்கத் (இம்பீச்மென்ட்) தீர்மானம் கொண்டு வந்துள்ளது.

நீதிபதி மீது வீண் பழி சுமத்தி பதவி விலக்க வைக்க சதி செய்கிறது. இந்த இரு கட்சிகளும் இந்துக்களுக்கு எதிரான நிலைப்பாட்டை இதன்மூலம் பட்டவர்த்தனமாக வெளிப்படுத்துகிறது. இத்தகைய நிலைப்பாடு இந்திய இறையாண்மைக்கு எதிரானதாகும்.

நீதிபதி மீதான குற்றச்சாட்டு ஒரு தீர்ப்புக்காக பாராளுமன்றத்தில் கொண்டு வருவது இதுவே முதல்முறை. இது நீதித்துறை மீதான தாக்குதல் மட்டுமல்ல, நீதிபதிகளை மிரட்டும் போக்கு என்பதையும் சுட்டிக் காட்ட விரும்புகிறோம்.

திருப்பரங்குன்றம் மலை தீபத் தூணில் தீபம் ஏற்றும் தீர்ப்பை மதிக்காமல் காவல்துறையும், மாவட்ட கலெக்டர் உள்பட அரசு நிர்வாகமும் சட்டத்திற்கு விரோதமாக நடந்து கொண்டது. நீதிமன்றத் தீர்ப்புக்கு மேல்முறையீடு செய்யலாம். ஆனால் உயர்நீதிமன்றத் தீர்ப்பை மறுப்பதற்கு மாநில அரசுக்கோ, காவல்துறைக்கோ எந்த அதிகாரமும் இல்லை. அதையும் பொதுவெளியில் காவல்துறை அதிகாரி பேசியது அதிகார துஷ்பிரயோகமாகும்.

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பல நீதிமன்ற தீர்ப்புகளை நடைமுறைபடுத்த வில்லை. இத்தகைய போக்கு கவலைக்குறியதும், கவனத்திற்குரியதும் ஆகும்.

திமுக, காங்கிரஸ் கொண்டு வந்துள்ள தீர்மானம் பாராளுமன்றத்தில் வெற்றி பெறாது என்றாலும், அவதூறு பரப்ப இதனை வாய்ப்பாக பயன்படுத்துவதை ஏற்க முடியாது.

தீர்ப்பின் மீதான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இருக்கும் போது அந்தத் தீர்ப்பை அளித்த நீதிபதியை விமர்சனம் செய்ய அனுமதிக்கக்கூடாது. இது நீதித்துறையை மிரட்டி பணிய வைக்கும் சதி ஆகும்.

பாராளுமன்றத்தில் திமுக கொண்டு வந்துள்ள பிரேரணையை சபாநாயகர் நிராகரிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம். திமுகவும், காங்கிரசும் நீதிமன்றத்தீர்ப்பை அவமதித்ததுடன், நாட்டு மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் போக்கை வன்மையாக கண்டிக்கிறோம்.

மேலும் திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றுவது இந்துக்களின் உரிமை. இதற்கு எதிராக திமுக மற்றும் காங்கிரஸ் உட்பட தமிழக எம்பிக்கள் செயல்படுவது தமிழகத்திற்கு செய்யும் துரோகம்.
எனவே பாராளுமன்றத்தில் கொண்டு வந்துள்ள நீதிபதிக்கு எதிரான தீர்மானத்தை அனைத்து எம்பிக்களும் ஒன்றுபட்டு தோற்கடிக்க வேண்டும். நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்து செயல்படும் தமிழக அரசை மக்கள் கண்டிக்க வேண்டும்.

இந்துக்களுக்கு எதிரான எம்பிக்கள் மற்றும் கட்சிகளை வருகின்ற தேர்தலில் தோற்கடித்து ஜனநாயக வழியில் பாடம் புகட்டுவோம் என காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

Tags: Thiruparankundram issueThiruparankundram temple.Thiruparankundram case.thiruparankundram newsthiruparankundram rowthiruparankundram protestthiruparankundram muruganparlimentthiruparankundram judgementThiruparankundramjudge gr swaminathanThiruparankundram hillThiruparankundram hill issue
ShareTweetSendShare
Previous Post

இந்தியாவின் பன்முகத்தன்மை – ரஷ்ய அதிபர் புதின் பாராட்டு!

Next Post

மத்திய தகவல் ஆணையர்கள் தேர்வு – பிரதமர் மோடி, அமித் ஷா, ராகுல் காந்தி ஆலோசனை!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies