பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர் அமித் ஷாவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சந்தித்துப் பேசியுள்ளார்.
நாட்டில் மத்திய தலைமை தகவல் ஆணையர் மற்றும் 8 தகவல் ஆணையர்களைத் தேர்வு செய்யும் குழுவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித் ஷா, எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் ராகுல் காந்தி உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.
நாட்டில் காலியாக உள்ள 8 தகவல் ஆணையர்களைத் தேர்வு செய்யும்பொருட்டு இந்தக்குழு கூடி ஆலோசித்துள்ளது. பிரதமர் மோடியின் அறையில் நடைபெற்ற கூட்டத்தில் பிரதமர் மோடி மற்றும் அமித் ஷாவுடன் ராகுல் காந்தியும் கலந்துகொண்டதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
















